பிரதான செய்திகள்

பொத்துவில் பள்ளிவாசல் திறப்பு நிகழ்வில் ஹக்கீம்,றிஷாட்

மர்ஹூம் சதக்கத் ஹாஜியார் மற்றும் அவரது பிள்ளைகளின் முழு முயற்சியினால், நிர்மாணிக்கப்பட்ட பொத்துவில் பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் இன்று வௌ்ளிக்­கிழமை வக்பு செய்யும் நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் மற்றும் அழைப்பின் பேரில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கலந்துகொண்டனர்.

பொத்துவில் பகுதியை பிறப்பிடமாக கொண்ட மர்ஹூம் சதக்கத் ஹாஜியார், எகலியகொட பகுதியில் திருமணம் செய்து மாணிக்க கல் வியாபாரத்தில் பிரசித்திபெற்று விளங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் அமைச்சர்களான, விஜித் விஜயமுனி சொய்ஷா, பிரதியமைச்சர்களான பைசால் காசிம், எச்.எம்.எம். ஹரீஸ், அமீர் அலி, இரா­ஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பெளசி, மாகாணசபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன், முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதா­வுல்­லா உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.


Related posts

பெண்களே அவதானம்! கயவர்களின் மற்றுமொரு சதி.

wpengine

முன்னால் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தைப்பொங்கல் வாழ்த்து

wpengine

ஊரடங்கு தொடர்பில் ஜனாதிபதியின் கடுமையான உத்தரவு

wpengine