பிரதான செய்திகள்

பொது மக்களுக்கு வைத்தியர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!

சந்தையில் விற்பனை செய்யப்படும் குடிநீர் போத்தல்களில் மீண்டும் நீர் நிரப்புவது பொருத்தமானதல்ல என கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்தியர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.

குறித்த போத்தல்களில் கடுமையான சூரிய ஒளிபடும் நிலையில் சில இரசாயனங்கள் தண்ணீரில் கலக்கப்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், பாடசாலை மாணவர்கள் முடிந்தவரை வீட்டில் இருந்து குடிநீரை எடுத்துச் செல்வதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறும் வைத்தியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஒரு முறை மாத்திரம் பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட போத்தல்களில் மீண்டும் நீர் நிரப்புவதை தவிர்த்து, கண்ணாடி அல்லது தரமான போத்தல்களை பயன்படுத்துவது மிகவும் பொருத்தமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலைகளில் ஆசிரியர்கள் இந்த விடயம் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும், மாணவர்களுக்கு போதுமான சுத்தமான குடிநீரை வழங்குவதை உறுதி செய்வது மிகவும் அவசியமெனவும் லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்தியர் ஜி.விஜேசூரிய வலியுறுத்தியுள்ளார்.

Related posts

சரியான முறையில் பூர்த்தி செய்து அவசரமாக கிராம சேவகரிடம் ஒப்படைக்கவும்.

wpengine

நாட்டிலிருந்து கடந்த காலங்களில் வெளியேறிய விசேட வைத்திய நிபுணர்கள், மீண்டும் நாட்டுக்கு வர வேண்டும்.

Maash

பனாமா பேப்பர்ஸில் 46 இலங்கையரின் ஊழல் விபரங்கள்: 13 முஸ்லிம்கள், 05 தமிழர்கள் உள்ளடக்கம்

wpengine