பிரதான செய்திகள்

பொது மக்களுக்கு அறிவித்தல்! வவுனியாவில் சுவரொட்டிகள்

வவுனியா – பழைய பேருந்து நிலையம் 31ஆம் திகதியில் இருந்து செயற்படாது என வவுனியா நகரசபையில் பொது மக்களுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா நகரசபையின் செயலாளரினால் கையொப்பமிட்டு பழைய பேருந்து நிலையத்தில் அறிவித்தல் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

வடமாகாண முதலமைச்சரின் பணிப்புரைக்கமைய வவுனியா நகரசபைக்குரிய பேருந்து நிலையம் இன்று நள்ளிரவு 12 மணியில் இருந்து மூடப்படவுள்ளதால் இன்றில் இருந்து பொது மக்கள் தமது பிரயாணங்களை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து அனைத்து பேருந்துகளும் சேவையில் ஈடுபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

2025ஆம் ஆண்டில் 5லச்சம் வீட்டு திட்டம் சஜித்

wpengine

இரவு நேரத்திலும் குடி நீர் வழங்க அமைச்சர் ஹக்கீம் நடவடிக்கை

wpengine

எழுக தமிழ் பேரணியூடாக தற்போது இனவாதம் துண்டிவிடப்படுகின்றது-உதய கம்மன்பில

wpengine