பிரதான செய்திகள்

பொதுமக்களை ஏமாற்றும் பிரசாரத்தையே அரசாங்கம் மேற்கொள்வதாக முஜிபுர் ரகுமான் குற்றச்சாட்டு!

அரசாங்கம் பொதுமக்களை ஏமாற்றும் பிரசாரத்தை மேற்கொண்டு வருவதாக கொழும்பு மேயர் பதவிக்கு போட்டியிடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த முஜிபுர் ரகுமான் தெரிவித்துள்ளார்.

சில எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் சேர முயற்சிப்பதாக ஆளும்கட்சி உறுப்பினர்கள் பலர் கூறுவதில் உண்மையில்லை என முஜிபுர் ரகுமான் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பிலான சர்ச்சைகளும், மத்திய வங்கி தொடர்பான சட்டமூலம் குறித்த குற்றச்சாட்டுகள் அரசாங்கம் நெருக்கடியில் உள்ளதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்றார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் 54 நாடாளுமன்ற உறுப்பினர்களில் நான்கு பேர் இதுவரை ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தயானா கமகே, ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார மற்றும் அரவிந்த் குமார் ஆகியோர் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கல்முனையில் இனவாதம் இயலாமையால் வென்றதா..??

wpengine

2054 இல் அனைத்து மதங்களும் அழிந்துவிடும் : பௌத்த தர்மமே கோலோச்சும் – அமைச்சர் ராஜபக்ஷ

wpengine

ஹஜ்ஜின் சிறப்பறிய வேண்டுமன்றோ?

wpengine