பிரதான செய்திகள்

பொதுபல சேனாவுடன் இணைந்து செயற்பட்டோம்! ஞானசார மஹிந்த காப்பாற்றுகின்றார் -சம்பிக்க

பொதுபல சேனா பௌத்த அமைப்பு ஆரம்பத்தில் எம்முடன் இணைந்து செயற்பட்ட போதிலும் இப்போது எமக்கும் அவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஞானசார தேரரை நான் காப்பாற்றவில்லை என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஞானசார தேரரை மஹிந்த ராஜபக்ஷவே காப்பாற்றுகின்றார் எனவும் அவர் குறிப்பிட்டார். 

பொதுபல சேனா பௌத்த அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையிலும் அவர் தலைமறைவாகியுள்ள நிலையிலும் அவரை அமைச்சர் சம்பிக்க ரணவக்க பாதுகாத்து வருகின்றார் என பொது எதிரணியின் உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன குற்றம்சாற்றியுள்ளார்.

இந்நிலையில் அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் கூறும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Related posts

மன்னார் மக்களை ஏமாற்றும் நகை கடை உரிமையாளர்கள்

wpengine

மஹிந்த ராஜபக்சவின் ஊடகப்பேச்சாளராக ரவீந்திர மனோஜ் கமகே நியமனம்

Editor

இந்தியாவில் Cryptocurrency தடை செய்யப்படுமா? அல்லது அங்கீகரிக்கப்படுமா? நிதியமைச்சர்

wpengine