பிரதான செய்திகள்

பொதுத்தேர்தலை ஒத்திவைக்கும் தீர்மானம் எடுக்கவில்லை

பொதுத்தேர்தலை ஒத்திவைக்கும் தீர்மானம் எதனையும் தேர்தல்கள் ஆணைக்குழு எடுக்கவில்லை என்று அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.


பதுளையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


முதலில் பொது மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்கவேண்டும். இதன் அடிப்படையில் ஏப்ரல் 25ம் திகதி தேர்தல் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.


அரசியல் கட்சிகளை பொறுத்தவரையில் அவை மார்ச் 26ம் திகதிவரை அரசியல் பொதுக்கூட்டங்களை நடத்துவதில்லை என்று அறிவித்துள்ளதாக ஆணையாளர் தெரிவித்தார்.


இதேவேளை பொது மக்கள் தாமே தம்மை தனிமைப்படுத்தல் மற்றும் மருத்துவ ஆலோசனை பின்பற்றினால் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தமுடியும் என்று தேசப்பிரிய கூறினார்.

Related posts

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Editor

25 வயது இளைஞரின் காதலி வழக்கு விஷ ஊசி செலுத்தி மரண தண்டனை

wpengine

ஆசிரியரை பந்தாடிய மாணவிகள் (வீடியோ)

wpengine