பிரதான செய்திகள்

பொதுஜன பெரமுன கட்சியின் அலுவலகம் கிளிநொச்சியில் இன்று திறந்து வைக்கப்பட்டது.

நாட்டில் தற்போது காணப்படும் சூழலில் தமது கட்சி பாரிய வெற்றியை பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக பலரும் தெரிவித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்மகே தெரிவித்துள்ளார்.


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அலுவலகம் கிளிநொச்சியில் இன்று திறந்து வைக்கப்பட்டது. இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

சிங்கள மக்கள் பொதுஜன பெரமுனவிற்கு வாக்களித்து அமோக வெற்றியை பெற்றுக் கொடுக்கத் தயாராகிவிட்டதாகவும் இந்த வெற்றிக்கு தமிழ் மக்களின் பங்கும் உள்ளது எனவும் அவர் இங்கு குறிப்பிட்டார்.

அதனால் நாட்டின் தமிழ் மக்களின் ஆதரவினை தாம் கோருவதாகவும் இங்கு தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன கட்சிக்கு உள்ளூராட்சி தேர்தலின் போது 51 இலட்சம் வாக்குகள் காணப்படுகின்றது. அதேபோன்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு 16 லட்சம் வாக்குகள் உள்ளன.

எதிர்வரும் தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து கேட்க உள்ளமையால் அதிகளவான வாக்குகளுடன் அமோக வெற்றியை கோத்தபாய ராஜபக்ச பெறுவார்.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகியன இணைந்து குறைந்த அளவிலான வாக்குகளையே பெறுவார்கள்.

கடந்த கால ஆட்சியில் அபிவிருத்திகளோ, வேலை வாய்ப்புக்களோ கிடைக்கவில்லை. இந்த அரசாங்கம் நினைத்திருந்தால் சிறந்த ஆட்சியை செய்திருக்க முடியும். வங்கிகளிற்கு ஊழியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

அந்த நியமனங்களை ஐக்கிய தேசியக் கட்சியே செய்கின்றது. அங்கு சிங்கள ஊழியர்களே நியமிக்கப்படவுள்ளனர்.

அதே போன்றே ஆசிரியர் நியமனங்கள் உள்ளிட்ட பல தொழில் வாய்ப்புக்களை இந்த அரசு செய்து கொடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பொதுஜன பெரமுனவில் இணைந்த முன்னால் அமைச்சர்

wpengine

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் வழக்கு – நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

Editor

கத்திகள், கைப் பிடிகளையே கனரக ஆயுதமாகவும் சமையலறைகளை பயிற்சி முகாம்களாகவும் காட்டும் ஊடக மேலாண்மைவாதிகள்

wpengine