பிரதான செய்திகள்

பொதுஜன பெரமுனவுக்கும் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 68ஆவது ஆண்டு மாநாட்டுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.


கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் எதிர்வரும் 3 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு கட்சியின் மாநாடு நடைபெறவுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து செயற்படும் அனைத்து அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தனிப்பட்ட நபர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட மாட்டாது. கட்சிகளின் செயலாளர்கள் தெரிவு செய்யும் பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்துக்கொள்வார்கள் எனவும் மகிந்த அமரவீர கூறியுள்ளார்.

கொழும்பு டாலி வீதியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திரக் கட்சியின் மாநாட்டுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அல்லது பொதுஜன பெரமுனவில் இணைந்துக்கொண்டுள்ள சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுமா என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள அமரவீர, கட்சியினர் மாநாட்டில் கலந்துக்கொள்ள அழைப்பிதழ் அவசியமில்லை.

கட்சிக்காக அவர்கள் மாநாட்டில் கலந்துக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.

Related posts

வவுனியாவில் “இடியன்”துப்பாக்கியுடன் இளைஞன் கைது

wpengine

உயர் சபையில் அப்பட்டமான பொய்களை பேசும் சார்ள்ஸ் நிர்மலநாதன் பா.உ

wpengine

Ghibli- style Ai image ஆபத்தின் மறுபக்கம் அவதானம் . ..

Maash