பிரதான செய்திகள்

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி ஒருவர் நாட்டின் ஜனாதிபதி

எதிர்வரும் டிசம்பர் 9 ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி ஒருவர் நாட்டின் ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்வார் என அந்த பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தவறான முறையில் சம்பாதித்த 50 மில்லியன் ரூபாய் பணத்தை செலவிட்டு மாத்தறை பிரவுண்ஸ்ஹில் பகுதியில் காணி ஒன்றை கொள்வனவு செய்தமை தொடர்பாக தொடரப்பட்டுள்ள வழக்கு இன்று மாத்தறை நீதவான் நீதிம்னறத்தில் ஆஜராகிய பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன் போது தேசிய அரசாங்கம் தொடர்பாக செய்தியாளர்கள் பசில் ராஜபக்சவிடம் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த பசில், தேசிய அரசாங்கம் அவசியமில்லை.

அத்துடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்வரும் டிசம்பர் 9 ஆம் திகதி பதவிப்பிரமாணம் செய்த பின்னர் இலங்கையில் உள்ள 36 ஆயிரம் கிராமங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் உருவாக்கப்படும்.

மேலும் இலங்கையில் வாழும் குடும்பங்களுக்கு வளமான எதிர்காலத்தை உருவாக்கிக்கொடுக்கும் வேலைத்திட்டத்தை பொதுஜன பெரமுன தற்போது தயாரித்து வருகிறது. இதற்கு அமைய புதிய ஜனாதிபதியின் கீழ் நாட்டை முறைப்படுத்த எண்ணியுள்ளதாகவும் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

Related posts

நாட்டின் பல பாகங்களிலும் நேற்று தலைபிறை

wpengine

விவசாய நிலங்களை பார்வையீட்ட அமீர் அலி

wpengine

பசில் ராஜபக்ஸ மீண்டும் கைது

wpengine