Breaking
Mon. Nov 25th, 2024

பொது­ப­ல­சேனா அமைப்பு அடிப்­படை வாத இன­வாத இயக்­க­மென்றும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்­சியைக் கவிழ்ப்­ப­தற்குக் கார­ண­மாக இருந்­த­தென்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விமல் வீர­வன்ச முஸ்லிம் அடிப்­ப­டை­வாத இயக்­கங்­க­ளி­ட­மி­ருந்து பணம் பெற்றுக் கொண்டு பிர­சாரம் செய்து வரு­கிறார் எனவும் இதனை முற்­றாக மறுப்­ப­தா­கவும் பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்தார்.
கிரு­லப்­ப­னை­யி­லுள்ள பௌத்த மத்­திய நிலை­யத்தில் நடை­பெற்ற பொது­ப­ல­சே­னாவின் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யிலே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

விமல் வீர­வன்ச எம்.பி கடந்த 9 ஆம் திகதி தொலைக்­காட்சி நிகழ்ச்­சியில் பொது­பல சேனா­வுக்கு எதி­ராக சுமத்­திய குற்­றச்­சாட்­டு­க­ளுக்குப் பதி­ல­ளிக்கும் முக­மாக இந்த ஊட­க­வி­யலார் சந்­திப்பு ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. ஞான­சா­ர­தேரர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது,

விமல் வீர­வன்ச ஒரு தொலைக்­காட்சி நிகழ்ச்­சியில் பொது­ப­ல­சேனா அமைப்பு நாட்டின் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்­சியைக் கவிழ்ப்­ப­தற்கு சர்­வ­தேச நாடு­களின் உத­வி­யுடன் சூழ்ச்சி செய்­தது. நோர்வே நாட்­டி­லி­ருந்து பொது­பல சேனா­வுக்கு இதற்­காக பணம் கிடைத்­தது. பொது­ப­ல­சேனா அமைப்பு ஒரு அடிப்­படை வாத இன­வாத இயக்­க­மாகும். நாட்டில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து மஹிந்த ராஜபக்ஷவி­ட­மி­ருந்து முஸ்­லிம்­களைத் தூர­மாக்­கி­யது. ஏகா­தி­பத்­தி­ய­வா­தி­களின் திட்­டத்தை நிறை­வேற்­றி­யது என்­றெல்லாம் பொய் குற்றம் சுமத்­தி­யுள்ளார்.

2013 ஆம் ஆண்டு மே மாத கூட்­டத்­திலும் விமல் வீர­வன்ச பொது­பல சேனா­வுக்கு இவ்­வா­றான குற்­றச்­சாட்­டு­க­ளையே முன்­வைத்தார். இந்தக் குற்­றச்­சாட்­டு­களை நாம் மறுத்­த­துடன் குற்­றச்­சாட்­டு­களை ஆதா­ரங்­க­ளுடன் ஒப்­பு­வித்தால் ஒப்­பு­வித்து ஒரு மணித்­தி­யா­ல­யத்­துக்குள் பொது­ப­ல­சேனா அமைப்பைக் கலைத்து விடு­வ­தாக நாம் சவால் விட்­டி­ருந்தோம்.

எமது சவால் 2013 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி பத்­தி­ரி­கை­களில் பிர­சு­ர­மா­கி­யி­ருந்­தன.

ஆனால் விமல் வீர­வன்ச எமது சவாலை இன்று வரை ஏற்றுக் கொள்­ளாது மௌன­மா­கவே இருக்­கிறார்.

இன்று மீண்டும் அதே சவாலை நாம் முன்­வைக்­கிறோம். விமல் வீர­வன்ச எமக்­கெ­தி­ராக முன்­வைக்கும் குற்­றச்­சாட்­டு­களை நிரூ­பித்தால் ஒரு மணித்­தி­யா­லத்­திற்குள் எமது அமைப்பை கலைத்து விட தயா­ராக இருக்­கின்றோம்.

அன்று அவர்­க­ளது அர­சாங்­கமே பத­வி­யி­ருந்­தது. அமைச்சர் டிலான் பெரே­ராவும் இவ்­வா­றான குற்­றச்­சாட்­டு­க­ளையே முன்­வைத்தார். குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவின் மூலம் அன்று எமக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்­கலாம். ஆனால் அவ்­வாறு நடை­பெ­ற­வில்லை.
நாம் அன்று இலங்­கையில் ஐ.எஸ்.தீவி­ர­வாதம் இருக்­கி­ற­தென்றோம் கூர­கல புனித பூமி பிர­தேசம் எமக்குச் சொந்­த­மா­ன­தென்றோம் ஹலால் பிரச்­சினை பற்றி குரல் எழுப்­பினோம்.

நாம் அன்று கூறி­ய­வைகள் வெறும் பொய்யா? அனைத்தும் உண்­மை­யென்று இன்று நிரூ­ப­ண­மா­கி­யுள்­ளது.

விமல் வீர­வன்ச ஒவ்வோர் இடத்­துக்கும் சென்று எம்­மீது பொய் பிர­சா­ரங்­களை மேற்­கொள்­ளாது எம்­மீது சந்­தே­கங்கள் இருந்தால் நேர­டி­யாகப் பேசும் படி கேட்டுக் கொள்­கிறேன்.

இதை விடுத்து முஸ்லிம் அடிப்படைவாத இயக்கங்களிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டு எம்மைப் பற்றி பொய்யான கருத்துகளை மேடையேற்ற வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

பொதுபலசேனா அமைப்பு விமல் வீரவன்சவுக்குப் பயந்து தனது செயற்பாடுகளிலிருந்தும் விலகிக் கொள்ளாது எமது நியாயமான போராட்டங்களை தொடர்ந்தும் ஈடுபடுவோம் என்றார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *