பிரதான செய்திகள்

பைசல் காசிமின் அறிக்கை! பிள்ளைகள் எழுதிப்பழகியது போல உள்ளது.

(அஸாம் அப்துல் சாய்ந்தமருது)

இன்று பிரதி அமைச்சர் பைசால் காசீம் சாய்ந்தமருது தொடர்பாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையை வாசித்த போது மிகச் சிறு வயதான பிள்ளைகள் எழுதிப்பழகியது போன்ற உணர்வு ஏற்பட்டது.

பிரதி அமைச்சர் பைசால் காசீம் அவ்வளவு படிக்கவில்லை. தன்னோடு நன்கு படித்த ஒருவரை வைத்து கொண்டு அறிக்கை எழுதக் கூட பிரதி அமைச்சருக்கு தெரியாதா?

குறித்த அறிக்கையில் சாய்ந்தமருது மக்களை மக்குகள் என்று கூட கூறியுள்ளார். இதனை அவர் அறிந்து கூறினாரோ இல்லை தனது மனதில் இருந்தது வெளிப்பட்டதோ தெரியவில்லை.

இப்படியானவர் பாராளுமன்றம் சென்று எதனை சாதிக்க போகிறார். இவரை பாராளுமன்ற அனுப்பி வைத்த மக்களை என்னவொன்று சொல்வது. இவரை பாராளுமன்ற அனுப்பி வைத்த மக்கள் வெட்கப்பட வேண்டிய தருணம் இது.

அமைச்சர் ஹக்கீமுக்கு இவ்வாறானவர்களை தன்னுடன் வைத்திருக்க அதிக விருப்பம். அவர்கள் தானே அவரின் சொல்லுக்கு கட்டுப்படுவார்கள். அமைச்சர் ஹக்கீமின் அரசியல் விளையாட்டில் மக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள் என்பதுவே கவலையான விடயமாகும்.

 

Related posts

தென்னிலங்கை மீனவர்களை தடைசெய்ய வேண்டும்! முசலி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

wpengine

விக்னேஸ்வரனின் நோக்கத்திற்கு நாங்கள் தலைசாய்க்க முடியாது- ஹிஸ்புல்லாஹ்

wpengine

டிக் டொக் மோதல்! 17 வயதான அப்துல் லத்தீப் கத்தியால் குத்தி கொலை

wpengine