Breaking
Mon. Nov 25th, 2024

சுஐப் எம் காசிம்

மாவில்லு வர்த்தமானி பிரகடனத்தில் தமக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிகளை போக்கி, பிரகடனத்தை இரத்துச் செய்ய வேண்டுமென கடந்த 44 நாட்களாக மறிச்சிக்கட்டியில் கவனயீர்ப்புப் போராட்டத்த மேற்கொண்ட பாதிக்கப்பட்ட மக்கள் தமது போராட்டத்தை இன்று மாலை தற்காலிகமாக (08) இடை நிறுத்திக்கொண்டனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்று காலை (07) நடாத்திய பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட புரிந்துணர்வின் அடிப்படையில் மாவில்லு வர்த்தமானி பிரகடனத்தில் ஏற்பட்டுள்ள தவறுகளை திருத்தும் வழிவகைகள் ஏற்பட்டுள்ளதால்; போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்துமாறு அமைச்சர்களான றிஷாட் பதியுதீன் பைசர் முஸ்தபா தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி மற்றும் 53 இயக்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் கவ்ன்சில் தலைவர்  ஆகியோர் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டே இந்தப் போராட்டம் கைவிடப்பட்டது.

அரசியல் பிரமுகர்களான றிஷாட், பைசர் முஸ்தபா, அசாத் சாலி மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் விமானம் மார்க்கமாக களத்துக்குச் சென்று ஜனாதிபதியுடன் முஸ்லிம் சிவில் அமைப்புக்களும் தாங்களும் ஒருமித்து இணைந்து ஜனாதிபதியுடன்  நடாத்திய பேச்சுவார்த்தையின் விவரங்களை வெளியிட்டதுடன் மேற்கொண்டு தங்களால் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விபரித்தனர்.

ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் எதிர்வரும் 13ம் திகதி ஜனாதிபதியின் செயலாளருடன் நடாத்தப்படவுள்ள பேச்சுவார்த்தையில் தீர்க்கமான முடிவொன்று கிடைக்குமென்ற நம்பிக்கையை வெளியிட்டு, அரசியல் முக்கியஸ்தர்களும் சிவில் அமைப்புக்களின் முக்கியஸ்தர்களும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் மத்தியில் உரையாற்றினர். இந்த திருப்பு முனை நிகழ்வில் மஸ்தான் எம்.பி மக்கள் காங்கிரசின் செயலாளர் சுபைதீன், முஸ்லிம் கவுன்சிலின் உப தலைவர் ஹில்மி அஹமட், சிரேஸ்ட சட்டத்தரணி என்.எம்.ஸஹீட் ஆகியோரம் பங்கேற்றிருந்தனர்.

கவனயீர்ப்புப் போராட்ட ஏற்பாட்டுக்குழுவின் சார்பில் அலிகான் சரீப், காமில் தௌபீக் மௌலவி ஆகியோரும் உரையாற்றினர்.

அமைச்சர் பைசர் முஸ்தபா இங்கு கூறியதாவது உங்கள் துன்பங்களையும் துயரங்களையும் அமைச்சர் றிஷாட் வாயிலாக நான் அறிந்து கொண்டவன். நீங்கள் படும் கஷ்டங்களைவிட உங்களுக்காக அவர் படுகின்றபாடு பெரும்பாடாக இருக்கின்றது. அமைச்சின் பணிகளைவிட உங்களின் பணிகளுக்கு அவர் முன்னுரிமையளித்து வருகின்றார்.

1990ம் ஆண்டு நீங்கள் இந்தப்பிரதேசத்தில் எவ்வாறு வாழ்ந்தீர்களோ அதே உரிமையுடன் உங்களை வாழ அனுமதிக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம். அவர் ஒரு இனவாதியல்ல எனினும் சூழழைப்பாதுகாக்கும் நோக்கில் சில தவறுகள் இடம்பெற்றுள்ளதை சந்திப்பின் போது ஒப்புக்கொண்டார். சரியான பதில் கிடைப்பதற்காகவே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் இது நியாயமானதெனவும் நாங்கள் உணர்த்தினோம் எனவேதான் குழுவொன்றை நியமித்து இதற்கு தீர்வு காண பணித்துள்ளதாக அவர் கூறினார் அதன் வெளிப்பாடே எதிர்வரும் 13ம் திகதி நடைபெறவுள்ள உயர்மட்டக்கூட்டம். உங்களின் நிலவுரிமைப் போராட்டத்துக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் நாம் இந்தப்பிரச்சினையை இத்துடன் விட்டுவிடப்போவதில்லை. புலிகளினால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட உங்களை அரசாங்கமும் விரட்டியடிக்க இடமளிக்க மாட்டோம் என உறுதியளித்தார்.

தேசிய ஐக்கிய முன்னனியின் தலைவர் அசாத் சாலி இங்கு கூறியதாவது ஜனாதிபதி அமைத்துள்ள குழுவில் அமைச்சர் றிஷாட்டிடம் ஒரு பிரதிநிதியை ஜனாதிபதி கோரியபோது றிஷாட் தெளிவான பதில் ஒன்றை அளித்தது என்னை வியப்பில் ஆழ்த்தியது ‘ குழுவில் எனது பிரதிநிதி இடம்பெற்றால் அந்தக்குழு சுயாதீனமான குழுவாக அமையாது’ என அமைச்சர் றிஷாட் கூறி இது தொடர்பான விசாரணைகளை நேர்மையாகவும் நீதியாகவும் முன்னெடுத்து எங்களுக்கு நியாயம் பெற்றுத்தாருங்கள் என்றார். நூங்கள் எந்தப்பிழையும் செய்யவில்லை என ஜனாதிபதியிடம் அவர் உங்கள் சார்பாக மிகத்தெளிவாகத் தெரிவித்தார்.

அமைச்சர் றிஷாட் இங்கு உரையாற்றிய போது,பசியோடும் பட்டினியோடும் தொழிலுக்குச் செல்லாமல் 44 நாட்கள் மண் மீட்புப் போராட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும்; போராட்டத்துக்கு ஒத்துழைப்பு நல்கிய அனைத்துக்கட்சிகளையும் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கன, ஜம்மியத்துல்  உலமா, மற்றும் முஸ்லிம் கவுன்சில், ஸூரா கவுன்சில் உட்பட்ட சிவில் அமைப்புக்கள் ஊடகவியலாளர்கள், பல்வேறு கிராமங்களில் இருந்தும் இங்கு வந்து ஆதரவளித்த  தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் ஆகியோருக்கும் நன்றி தெரிவி;த்தார். அரசின் பலமின்றி மறிச்சிக்கட்டி பிரதேசத்தில் மீள்குடியேற்றத்தை ஆரம்பித்து இந்தப்பிரதேசத்தை அழகுபடுத்த தாம் மேற்கொண்ட முயற்சிகளை இனவாதிகiளுக்கு காட்டிக்கொடுத்து வில்பத்தை அழிக்கின்றார்கள் என்ற கருப்பொருளை அவர்களுக்கு வழங்கி எமது பிரதேசத்தின் மீள்குடியேற்றத்துக்கு தடையாக இருந்த ஒரு சிலர் தொடர்பாக தாம் வேதனையடைவதாகவும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் கூறினார்.

 

 

 

 

 

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *