தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

பேஸ்புக் வியாபரம் மன்னிப்பு கோரிய நிறுவனம்

பேஸ்புக் சமூகவலைத்தளத்தின் ஊடாக பொருட்களை கொள்வனவு மற்றும் விற்பனை செய்ய அறிமுகப்படுத்தப்பட்ட மார்க்கட் பிளேஸ்ஸை (Marketplace) இனந்தெரியாத சிலர் தவறான
முறையில் பயன்படுத்தியமை தொடர்பில் அந்த நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது.

சிறிய குழந்தைகள், அறிய வகை உயிரினங்கள், போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிகள் உட்பட
விற்பனை சட்டங்கள் காணப்படும் பல பொருட்களை மார்க்கட் பிளேஸ் ஊடாக விற்பனை
செய்ய  முயன்றுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனோடு சிறிய முள்ளம்பன்றி ஒன்றை விற்பனை செய்ய,, மார்க்கட் பிளேஸ் ஊடாக விளம்பரம்
செய்யப்பட்டமை தொடர்பாக கடும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

பின்னர் குறித்த விளம்பரம் அகற்றப்பட்டதுடன், இது போன்ற விளம்பரங்கள் எதிர்வரும் காலத்தில்
வெளியிடாமல் இருக்க உறுதியளிப்பதாக பேஸ்புக் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. மார்க்கட் பிளேஸ் ஊடாக எதிர்வரும் காலத்தில் இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு சந்தர்ப்பம்வழங்கப்படாததுடன், அதனை அதிக கண்காணிப்புடன் மேற்கொள்வதற்கும் அந் நிறுவனம்உறுதியளித்துள்ளது.

இதனுடன் மார்க்கட் பிளேஸ்ஸில் எதிர்வரும் காலத்தில் அனைவரும் இணைந்து கொள்ளும் வகையில் அதனை அதிக பாதுகாப்புடன் அமைக்கவுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டிய

wpengine

சஜித்தை அச்சுருத்தும் டயானா!

Editor

வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு சமஷ்டி வழங்க முடியாது

wpengine