தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

பேஸ்புக் புகைப்படம் ஒருவர் கைது

யுவதி ஒருவரின் நிர்வாண புகைப்படத்தினை பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட குற்றச்சாட்டு காரணமாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாந்தோட்டை பிரதேசத்தினைச் சேர்ந்த 23 வயதுடைய யுவதி, தனது காதலனுக்கு எதிராக குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு வழங்கிய முறைப்பாட்டிற்கமைய, குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது அனுமதி இல்லாமல் தனது நிர்வாண புகைப்படத்தினை காதலன், இவ்வாறு பேஸ்புக் தளத்தில் வெளியிட்டுள்ளதாக குறித்த யுவதி முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

குறித்த இளைஞர் தங்காலை பிரதேச சிறுவர் மற்றும் பெண்கள் பணியக பிரிவினால் கைது செய்ப்பட்டார்.

அதன் பின்னர் தங்காலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் குறித்து, சந்தேக நபரான இளைஞர் குற்றத்தினை ஒப்புக் கொண்டுள்ளதையடுத்து பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டுள்ளனர்.

Related posts

20ஆம் திருத்தம் ஆபத்தானது ராஜபக்ச ஒருநாளும் இந்த நாட்டின் ஜனாதிபதியாகியிருக்க முடியாது

wpengine

நீச்சல் உடையில் திருடனை பிடித்த பெண் பொலிஸ்

wpengine

முன்னால் அமைச்சர் றிஷாட்டின் முயற்சியினால் முதல் கட்ட 5000 ரூபா கொடுப்பனவு

wpengine