Breaking
Fri. Nov 22nd, 2024

இலங்கையில் உள்ள பேஸ்புக் பயனர்கள் தங்கள் சுயவிபர படத்திற்கு (profilepicture) பதிலாக கறுப்புக் கொடியின் படத்தை சுயவிவர படமாக மாற்றிக்கொள்ளுமாறு பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில வேண்டுகோள்விடுத்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் தனது இரண்டாவது வருட பூர்த்தியை ஜனவரி 8ம் திகதிகொண்டாடவுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கிலேயே இலங்கையில் உள்ள பேஸ்புக்பயனர்களுக்கு பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில இந்தவேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே உதய கம்மன்பிலமேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் மீது மக்கள் தங்கள் அதிருப்தியை வெளிகாட்டும்வகையில் இவ்வாறு கறுப்பு கொடியை காட்டுமாறு கம்மன்பில வலியுறுத்தியுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக நியமனம் பெற்றதன் பின்னர் சட்டவிரோதமானமுறையில் பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டார் என கம்மன்பிலகூறியுள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் இந்த நிலைமைகள் சர்வாதிகாரத்தின் முதல் படியாகஇருக்கின்றது என்றும் பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பிலதெரிவித்துள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *