பிரதான செய்திகள்

பேஸ்புக் சாட்டிங்! தொழிலதிபரின் வலையில் சிக்கிய பெண்

பாலியல் துஷ்பிரயோகம் செய்துவிட்டு தப்பியோடிய பேஸ்புக் ‘தொழிலதிபரை’ காவற்துறை தேடி வருகின்றனர்.

மும்பையை சேர்ந்த 40 வயது பெண் ஒருவருக்கு குஜராத்தைச் சேர்ந்த ‘தொழிலதிபர்’ ஒருவர் பேஸ்புக்கில் பழக்கமானார்.

இருவரும் சாட்டிங்கில் பேசிக்கொண்டிருந்தனர். பின்னர் போன் நம்பர்களை பரிமாறிக்கொண்டனர்.

இதையத்து வட்ஸ் ஆப்பிலும் தொடர்ந்தது நட்பு. சிறது நாட்களுக்குப் பிறகு தொழிலதிபரின் ‘நோக்கம்’ தெரிந்ததும் நட்பைத் துண்டித்தார் பெண். இதற்கிடையே அந்த தொழிலதிபர், ‘நான் மும்பை வருகிறேன் ஒரு கப் காபி குடித்துவிட்டு பிரிந்துவிடலாம்’ எனச் சொன்னார்.

அதை நிஜம் என நம்பிய அந்த அப்பாவி பெண், தொழிலதிபர் அழைத்த ஸ்டார் ஓட்டலுக்குச் சென்றார்.

காபி குடித்தார். பிறகு அரை மயக்கமானார். எழுந்து பார்த்தால், அந்த நட்சத்திர ஹோட்டல் அறை ஒன்றில் இருப்பது தெரியவந்தது. இங்க எப்ப வந்தோம் என அவர் யோசித்தபோதுதான் தான் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது தெரிந்தது. இதுபற்றி கணவரிடம் கண்ணீர் மல்க சொன்னார் அந்தப் பெண். இரண்டு பேரும் சேர்ந்து காவற்துறையில் முறைப்பாடு செய்தனர்.

அந்த பேஸ்புக் தொழிலதிபரின் போன் அணைத்து வைக்கப்பட்டிருப்பதால் காவற்துறை விசாரித்து வருகின்றனர்.

பேஸ்புக் பாவனையாளர்களில் அதிகமானவர்கள் இவ்வாறு மாய வலைகளில் சிக்குவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

அம்பாறை கரும்பு, நெசவு உற்பத்தியாளர்களின் பிரச்சினை! றிசாத், ஹகீம், தயாவின் கோரிக்கையை நிதியமைச்சர் ஏற்பு

wpengine

இலங்கை வந்த சவூதி இராஜதந்திரிகள் குழுவிற்கு அழுத்தம் – சவூதி அரேபியாவிடம் மன்னிப்பு கோரிய இலங்கை!

Editor

வவுனியா பாடசாலையில் காதல் வாழ்த்து! பெற்றோர் விசனம்

wpengine