தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

பேஸ்புக் காதல்! 55 லட்சம் ரூபாய் பணம் மற்றும் நகைகள் கொள்ளை

பேஸ்புக் ஊடாக காதலித்த பெண்ணை நம்பி யாழ். வந்த ஜேர்மன் நாட்டில் வாழும் புலம்பெயர் தமிழரொருவரின் 55 லட்சம் ரூபாய் பணம் மற்றும் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், சம்பவம் குறித்து அந்த நபர் முறைப்பாடு செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியாவில் வாழ்வதாக கூறி முகப்புத்தகம் ஊடாக ஜேர்மன் நாட்டில் வாழும் புலம்பெயர் தமிழர் ஒருவரை குறித்த பெண் காதலிப்பதாக கூறி முகநூலில் காதலித்துள்ளார்.

இதனை நம்பி அந்த புலம்பெயர் தமிழர் கோப்பாய் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு கடந்த தை மாதம் வந்துள்ளார். அவருடன் அவருடைய முகப்புத்தக காதலியும் வந்து வீட்டில் தங்கியிருந்துள்ளனர்.

இவ்வாறு 14 நாட்கள் கடந்த பின்னர் திடீரென அந்த பெண் வீட்டிலிருந்த பணம், நகைகள், பொருட்கள் என சுமார் 55 லட்சம் ரூபாயினை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

இந்நிலையிலேயே, பாதிக்கப்பட்டவார் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுத்துள்ளார்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

Related posts

அரிசி பிளாஸ்டிக் அரிசி அல்ல! நுகர்வோர் அச்சம் கொள்ள தேவையில்லை

wpengine

தமிழர்களின் உடன்பாடின்றி முஸ்லிம்களால் அரசியல் தீர்வினை பெற்றுக்கொள்ள முடியுமா?

wpengine

20வது அரசியலமைப்புத் திருத்தம்! நீதி மன்ற தீர்ப்பு சபாநாயகரிடம்

wpengine