தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

பேஸ்புக் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர் மீது அவதூறு! வவுனியாவில் நேற்று விசாரணை

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தொடர்பில் முகநூலில் அவதூறு பரப்பியதாக மேற்கொள்ளப்பட்ட முறைபாடு தொடர்பான விசாரணைகள் நடைபெற்றன.

வவுனியா மாவட்ட பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே குறித்த விசாரணைகள் நேற்று மேற்கொள்ளப்பட்டன.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தொடர்பாக வவுனியாவைச் சேர்ந்த இளைஞரொருவர் தனது பிரத்தியேக முகநூலில் அவதூறு பரப்பியதாகவும், கட்சிக்கு இழுக்கை ஏற்படுத்தும் வகையிலான பொய்யான பரப்புரைகளை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இது தொடர்பில் வவுனியா மாவட்ட இணைப்பாளர் ராஜன் மற்றும் கட்சியின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் புருஸ் மற்றும் வவுனியா மாவட்ட கட்சியின் முக்கியஸ்தர்களினால் வவுனியா மாவட்ட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா பொலிஸார் குறித்த இளைஞனை நேற்று விசாரணைக்கு உட்படுத்தியிருந்தனர்.

விசாரணையின் முடிவில் குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து குற்றத்தை ஒப்புக்கொண்ட குறித்த இளைஞன் தான் தவறுதலாக இதை மேற்கொண்டதாக கூறி மன்னிப்பு கோரியுள்ளார்.

இதனையடுத்து செல்வம் அடைக்கலநாதன் குறித்த முறைப்பாட்டை மேற்கொண்டு செல்ல வேண்டாம் என்றும், தான் ஒரு மக்கள் பிரதிநிதி என்ற வகையில் அந்த இளைஞனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முறைப்பாட்டை மீளப்பெற்றுக்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பித்ததாக கட்சியின் இணைப்பாளர் ராஜன் தெரிவித்தார்.

இதேவேளை குறித்த இளைஞன் கடந்த 2015ஆம் ஆண்டு குறிப்பிட்ட ஓர் கட்சியில் நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்டவர் என்பது

Related posts

முசலி பிரதேச சபையினால் தெருவிளக்குகள் பொறுத்தப்படுமா? முகநூல் பாவனையாளர்கள் விசனம்

wpengine

இந்துநோசியாவில் 6.6ரிச்டர் நீல நடுக்கம்! இலங்கை பாதிக்குமா?

wpengine

தாருஸ்­ஸலாம் சொத்து விபரங்களை இன்னும் வெளியீடாத ஹக்கீம் – பஷீர் சேகு­தாவூத்

wpengine