வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இன்று காலை ஆசிரியர்கள் வகுப்பறைகளுக்குச் செல்ல மறுப்பு தெரிவித்துள்ளனர்.
தமது பாடசாலையைப் பற்றி முகநூலில் அவதூறு பரப்பியுள்ளதாகவும், அதற்கு உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் தெரிவித்து இன்றைய தினம் வகுப்பறைகளுக்கு செல்ல மறுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பாடசாலைக்குச் சென்ற வவுனியா தெற்கு வலயக் கல்விப்பணிப்பாளர், வவுனியா தலைமை பதில் பொறுப்பதிகாரி குமாரசிங்க, நெளுக்குளம் பொலிஸார் சம்பவம் தொடர்பான விடயங்களைக் கேட்டறிந்துள்ளனர்.
அத்துடன், பொலிஸ் தலைமையகத்திற்கு உடனடியாக அறிவிக்கப்பட்டு சைபர் பிரிவின் உதவியுடன் குறித்த நபரைக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்வதாகவும் பொலிஸார் வாக்குறுதியளித்துள்ளனர்.
இது தொடர்பில் வவுனியா தெற்கு வலயக் கல்விப்பணிப்பாளர் தெரிவிக்கையில்,
வகுப்பு பகிஸ்கரிப்பினைக் கைவிட்டு வகுப்பறைக்குச் சென்று மாணவர்களுக்கு கற்றல் நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்.
இது தொடர்பாக கூடிய கவனம் எடுத்து மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது. அத்துடன், ஆசிரியர்களை வகுப்பறைகளுக்குச் செல்லுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
கல்வி வலப்பணிப்பாளரின் கருத்துக்கு மதிப்பளித்து ஆசிரியர்கள் வகுப்பறைக்குச் சென்று கற்றல் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.
வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலயத்தினைப் பற்றி முகநூலில் அவதூறு பரப்பியவர்களின் விபரங்களைப் பெற்று நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் இதுவே இங்கு இடம்பெறும் இறுதி நடவடிக்கையாக இருக்கவேண்டும்.
இதற்கு அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனவும், பாடசாலை ஆசிரியர்கள் சார்பாக அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது எனவும் வவுனியா தெற்கு வலய கல்விப்பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.