தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

பேஸ்புக்கில் பரிசு பொதி மூலம் நிதி மோசடி

வெளிநாட்டிலிருந்து பரிசுப்பொதியை அனுப்புவதாககூறி, பேஸ்புக் மூலம் இலங்கையர்களிடம் வெளிநாட்டவர்கள் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

சில பேஸ்புக் பாவனையாளர்கள், இது தொடர்பான முறைப்பாடுகளை செய்துள்ளதாக கணினி அவசர பதிலளிப்பு பிரிவின் பிரதான தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்ரகுப்த தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 2017ஆம் ஆண்டில் பேஸ்புக் தொடர்பில் 3 ஆயிரத்து 400 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேஸ்புக்கில் புகைப்படங்களை மாற்றுவது தொடர்பிலேயே பெரும்பாலான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

பேஸ்புக் ஊடாக தொடர்பை ஏற்படுத்திய வெளிநாட்டவர்கள், அறிமுகமாகிய ஒரு மாத காலத்தில், பரிசுப் பொதியொன்றை இலங்கைக்கு அனுப்புவதாகவும், அதனை சுங்கத் திணைக்களத்திலிருந்து விடுவிக்க பணம் செலுத்த வேண்டும் எனவும் கூறி பணம் பறிக்கப்படுவதாக முறைப்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

எனினும், தமக்கு பரிசுப் பொதி கிடைக்கவில்லை என்றும், தாம் செலுத்திய பணமும் இல்லாமல் போயுள்ளதாகவும் முறைப்பாட்டாளர்கள் கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், இவ்வாறான நிலைமைகள் தொடர்பில், பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறு கணினி அவசர பதிலளிப்பு பிரிவின் பிரதான தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்ரகுப்த தெரிவித்துள்ளார்.

Related posts

யாழ்ப்பாண கனியவளத்துறை அதிகாரியின் ஊழல்

wpengine

வடக்கு,கிழக்கு இணைப்புக்கு எதிராக திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்

wpengine

அரசியல், இயக்கம்,கருத்து முரண்பாடுகளை மறந்து விட்டுக்கொடுப்புடன் செயற்பட வேண்டும் அமைச்சர் றிஷாட்

wpengine