உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

பேஸ்புக்கில் பதிவேற்றிவிட்டு மொடல்அழகி சபிரா ஹுசைன் தற்கொலை

காதல் விவகாரத்தில் விரக்கி அடைந்த மொடல் அழகி ஒருவர் தற்கொலை செய்யப்போவதாக பேஸ்புக்கில் பதிவுவேற்றி விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பங்களாதேஷில் இடம்பெற்றுள்ளது.

பங்களாதேஷில் மொடலிங், நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் மார்கெட்டிங் என பல்வேறு தொழில் புரியும் 21 வயதுடைய சபிரா ஹுசைன் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்தவராவார்.

இதேவேளை, பல்வேறு விளம்பரங்களிலும் நடித்துள்ள சபிரா ஹுசைன், நேற்று முன்தினம் தான் தற்கொலை செய்யப்போவதாக கூறி வீடியோ ஒன்றையும் தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.

அதில் ஒருவேளை நான் தற்கொலை செய்துகொண்டால், எனது தற்கொலைக்கு காரணம் தனது காதலன் தான் எனவும் தெரிவித்துள்ளார்.

சபிரா ஹுசைன், காதலன் நிர்ஜார் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் திடீரென சபிரா ஹுசைனை திருமணம் செய்ய அவரது காதலர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சபிரா ஹுசன் தனது தொடர்மாடி குடியிருப்பில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அயல்வீட்டார் அளித்த தகவலின்படி, குறித்த தொடர்மாடிக் குடியிருப்பில் இருந்து சபிரா ஹுசனின் உடலை பொலிஸார் மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

உள்ளூராட்சி தேர்தல்! விலக்கிகொண்ட நீதி மன்றம்

wpengine

அடுத்த அரசாங்கத்தில் சட்டத்தரணி அலி சப்றி நீதி அமைச்சர்

wpengine

உள்ளூராட்சி மன்ற தேர்தல்! சுதந்திரக் கட்சிக்கு ஆதரவளிப்பதில்லை- மஹிந்த

wpengine