Breaking
Sun. Nov 24th, 2024

இப்போது நீங்கள் பேஸ்புக்கில் உள்ளீர்களா? நன்று, இந்த செய்தி உங்களுக்கானது தான். பேஸ்புக் புதிததாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது, அதன்படி உங்கள் பேஸ்புக்கில்
உள்ள படங்களை உடனடியாக டவுன்லோட் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளது.

பேஸ்புக்கில் உள்ள டேட்டாக்கள் பாதுகாப்பானது அதனை ஏன் பேக்கப் எடுத்துக்கொள்ள வேண்டும்
என்று நீங்கள் உட்பட பலரும் நினைக்கலாம். இந்த புதிய அறிவிப்பு உங்களுக்கு மட்டுமல்ல, பேஸ்புக் பயன்படுத்தும் 1.65 மில்லியன் மக்களுக்கும் இது பொருந்தும். ஒரு நாளைக்கு பேஸ்புக்கில் லட்சக்கணக்கான படங்கள் அப்லோட் செய்யப்படுகின்றன.

பேஸ்புக் மொபைல் ஆப்பில் பல்வேறு மாற்றங்கள் குறித்து உங்களுக்கு நோட்டிபிகேசன் வந்திருக்கும். எனவே அதன்படி அவர்கள் உங்கள் படங்களை அழிக்கவுள்ளனர், இதற்கான மாற்றம் உங்கள் கைபேசியில் இருந்து ஆரம்பிக்கின்றது.

பேஸ்புக் நிறுவனம் Synced படங்களை ( Synced Photos) மற்றும் வீடியோக்களை பாதுகாக்க வேண்டுமெனில் புதிதாக Moments என்ற அப்பை டவுன்லோட் செய்து ஜூலை 7 ஆம் திகதிக்கு முன்னதாக log in செய்ய வலியுறுத்தியுள்ளது.

இந்த Moments அப் வேண்டாம் என்றால், உங்கள் கணிணியில் படங்களை டவுன்லோட் செய்து
கொள்ளுமாறு கூறியுள்ளது. இல்லாவிட்டால் படங்கள் மற்றும் வீடியோக்கள் அழிந்துவிடும் என்று தெரிவித்துள்ளது.

Moments  அப் மூலம் விரும்பியவர்களுக்கு மட்டும் தனியாக அனுப்பிக்கொள்ளும் வசதியை
கொண்டுள்ளது.

sync செய்யப்பட்ட குரூப் படங்களை குறிப்பிட்ட நண்பர்களுக்கு மட்டும் அனுப்பலாம்.

உங்கள் நண்பர்கள் உங்களுக்கு அனுப்பும் படங்களை நீங்கள் மட்டுமே காண முடியும்.
Moments வைத்துள்ளவர்கள் மட்டுமே உங்கள் படங்களை காண முடியும். இது போன்ற வசதிகள் பேஸ்புக்கின் புதிய Moments அப்பில் உள்ளது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *