தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

பேஸ்புக்கில் அனுப்பிய சிறுவன் பெற்றோரின் ஆபாச படத்தை

பெற்றோரின் ஆபாச படத்தை பேஸ்புக்கில் அனுப்பிய சிறுவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரை சேர்ந்த தம்பதியினர் தங்களது 13 வயது மகனுக்கு விலை உயர்ந்த மொபைல் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளனர்.

மொபைல் பயன்படுத்துவதில் அடிமையான அச்சிறுவன், முகநூல் கணக்கு ஒன்றினை துவங்கி, அதன் மூலம் தேஜல் படேல் என்பவருடன் சாட்டிங் செய்து வந்துள்ளான்.

இதன்போது, தேஜல் படேல் அச்சிறுவனுக்கு ஆபாச படங்களை அனுப்பியுள்ளார், மேலும் நான் அனுப்பியது போன்று நீயும் ஆபாச படங்களை அனுப்பு எனக்கூறியுள்ளார்.

பதிலுக்கு அச்சிறுவன், தனது பெற்றோர் நெருக்கமாக இருக்கும் காட்சியை ரகசியமாக புகைப்படம் எடுத்து அதனை அனுப்பியுள்ளான். மேலும் அது எனது பெற்றோர் தான் எனவும் தேஜலிடம் கூறியுள்ளான்.

இதனை அறிந்த தேஜல், அச்சிறுவனின் பெற்றோரை தொடர்பு கொண்டு உங்களின் ஆபாச படம் என்னிடம் உள்ளது, ரூ. 1 கோடி கொடுக்க வேண்டும், இல்லையெனில் சமூகவலைதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளான்.

அதே நேரத்தில் அந்த ஆபாச படத்தை உங்களது மகன் தான் முகநூலில் தனக்கு அனுப்பி வைத்ததாக அவர் சிறுவனின் பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த தம்பதி, உடனே தங்களது மகன் வைத்திருந்த மொபைலை வாங்கி பார்த்தனர். அப்போது தான், தாங்கள் நெருக்கமாக இருக்கும் ஆபாச படத்தை தேஜல் படேல் என்பவருக்கு சிறுவன் அனுப்பி வைத்தது தெரியவந்தது.

பின்னர் நடந்த சம்பவங்களை கூறி பெங்களூரு காவல் நிலையத்தில் உள்ள சைபர் கிரைம் பிரிவு பொலிசில் அந்த தம்பதியினர் புகார் கொடுத்தனர். சிறுவனுடன் முகநூலில் பழக்கமான தேஜல் படேல் யார்? என்பது தெரியவில்லை.

அவர் போலியான தகவல்களை கொடுத்து பேஸ்புக்கில் கணக்கு வைத்திருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர். அந்த மர்மநபரை பொலிசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Related posts

மன்னார் நகர பிரதேச செயலகத்தின் அசமந்த போக்கு! விசனம் அடைந்த இணைக்குழு தலைவர்கள்

wpengine

ஓட்டமாவடிக் கோட்டத்தில் அரசியல் மயப்பட்டுப்போன கல்வியற்கல்லூரி ஆசிரியர் நியமனம்

wpengine

அரச ஊழியர்களுக்காக குரல் கொடுக்கும் ஊழல் எதிர்ப்பு முன்னணி

wpengine