ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட வரவுசெலவுத்திட்டத்தில் பல்கலைக்கழக ஊழியர்களின் கொடுப்பனவுகள் இல்லாமல் ஆக்கப்பட்டது தொடர்பில் பேராதனைப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போதைய அரசாங்கத்தினால் முன்வைத்த வரவு செலவு திட்டத்தில் பல்கலைக்கழக ஊழியர்களின் கொடுப்பனவுகள் இல்லாமல் ஆக்கப்பட்டது தொடர்பாகவும் மற்றும் ஏனைய பிரச்சனைகளுக்கு தீர்வு கோரியும் அரசாங்கத்திற்கு எதிர்ப்பினை தெரிவிக்கும் முகமாக இன்று (04) பகல் 12 மணிக்கு பேராதனை கலஹா சந்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை அனைத்து பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் சம்மேளனம் ஏற்பாடு செய்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பேராதனைப் பல்கலைக்கழக ஊழியர்கள் பதாதைகள் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.