பிரதான செய்திகள்

பேதமற்ற நாட்டினைக் கட்டியெழுப்புவோம்; ஜனாதிபதியின் வாழ்த்து செய்தி

ஒரே தேசம்,ஒரே மக்கள் என்ற ரீதியில் தேசத்தைக்கட்டியெழுப்புவதற்கு அனைவரும் உறுதியுடன் செயற்படப் பிரார்த்திப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கைவாழ் இந்துக்களினதும், சிங்கள பௌத்தர்களினதும் மிக முக்கியமான தேசிய கலாசார விழாவாகவே சித்திரைப் புத்தாண்டு கொண்டாடப்படுகின்றது.

புத்தாண்டானது, அர்ப்பணிப்பு, பாராட்டுதல், பகைமை மறத்தல், பெரியோரைக் கனம் பண்ணுதல், பரிசுப் பொருட்களைப் பரிமாறிக் கொள்ளுதல் ஆகியவற்றின் ஒட்டுமொத்த வடிவமாகும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

சித்திரைப் புத்தாண்டில் இந்த நற்குணங்களை செயலில் காட்டி அவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து கலாசார உரிமைகளை பேணிப் பாதுகாத்தவாறு மன மகிழ்ச்சியை ஏற்படுத்துவது நம் அனைவரினதும் பொறுப்பாகும் என வாழ்த்து செய்தியில் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

பேதங்களும் பாகுபாடுகளும் இல்லாத, போதைப்பொருள் மற்றும் மதுபானப் பவனை அற்ற, ஒரு தேசத்தை உருவாக்கும் வேலைத்திட்டத்திற்கு அனைவரினதும் பூரண ஒத்துழைப்பை நல்கும் வகையில் சித்திரைப் புத்தாண்டை கொண்டாட உறுதி கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதாகவும் ஜனாதிபதி தமது புத்தாண்டுச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Related posts

மாத்தறையில் துப்பாக்கிச் சூடு!

Editor

சஜித்திடம் வேட்பாளர் சீட்டு சண்டை போடும் ரணில்

wpengine

நாவலடி பிரதேசத்தில் கஞ்சா விற்பனை! ஒருவர் கைது

wpengine