பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

பேசாலை விளையாட்டு மைதானத்திற்கு நிதி ஒதுக்கிய சார்ள்ஸ் பா.உ

மன்னார், பேசாலை புனித வெற்றி நாயகி விளையாட்டு மைதான நிர்மாணிப்பிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனின் 15 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டின் மூலம் குறித்த மைதானத்தின் நிர்மாணிப்பு வேலைகள் இடம்பெறவுள்ளன.

இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், வடமாகாணசபை உறுப்பினர் சட்டத்தரணி பிரிமூஸ் சிறாய்வா ஆகியோர் இணைந்து அடிக்கல்லினை நாட்டி வைத்து, பணிகளை ஆரம்பித்து வைத்துள்ளனர்.

குறித்த நிகழ்வின்போது, பேசாலை பங்குத்தந்தை, அருட்பணி பேரவை பிரதிநிதிகள், வெற்றி நாயகி விளையாட்டுக்கழக வீரர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts

மாகாண சபைகளுக்கு அதிகாரப் பகிர்வு

wpengine

பசில் ராஜபக்ஸ மீண்டும் கைது

wpengine

கருணா மற்றும் பிள்ளையான் பிரபாகரனின் இருப்பிடம் தொடர்பில் எந்தவித தகவலையும் வழங்கவில்லை.

Maash