செய்திகள்பிரதான செய்திகள்

பேசாலையை சேர்ந்த மூவர் தனுஷ்கோடியில் அகதிகளாக தஞ்சம்..!

இராமேஸ்வரத்தை அடுத்துள்ள தனுஷ்கோடி மணல் தீடையில் 3 இலங்கையர்கள் சுற்றி திரிவதாக கடலோர காவல்படை பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து குறித்த மூவரையும் கடலோர காவல்படையினர் கைது செய்தனர்.

அப்போது அவர்கள் இலங்கை பேசாளை பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், குடும்ப சூழ்நிலை காரணமாக இந்தியாவிற்கு தஞ்சமாக வந்தோம் என தெரிவித்தனர். இதையடுத்து 3 பேரும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

அகதிகளாக வந்த 3 பேர் மீது ஏதேனும் குற்ற வழக்குகள் உள்ளதா? என உளவுத்துறை பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதன் பின் அவர்கள் அகதிகள் முகாமிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

வவுனியா மாணவி படுகொலை! மன்னார் மறைமாவட்ட பரிபாலகர் ஆயர் கண்டனம்

wpengine

பொதுத்தேர்தலை நடத்த எடுத்த தீர்மானத்தின் ஊடாகவே அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளது.

wpengine

ஹவாய் தீவுப்பகுதியில் இடம்பெற்ற காட்டுத்தீ – பலியானோர் எண்ணிக்கை 67 ஆக உயர்வு!

Editor