செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திமன்னார்

பேசாலையில் துறைமுகம் : கடற்படையினர் கையகப்படுத்திய காணிகள் விடுவிக்கப்படுமா? நேற்று இடம்பெற்ற மீனவர் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்.

மன்னார் மாவட்ட மீனவர் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நேற்று (24, 2025) மன்னார் மாவட்ட செயலக நெய்தல் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

மீனவ சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கண்டறிந்து,
அவற்றுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதே இக்கூட்டத்தின் முக்கிய நோக்கம்.

இக்கூட்டத்தில், மீனவ சமூகம் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது:

கூட்டம் தொடர்பில் அமைச்சர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

கடற்படையினரால் கையகப் படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பது பற்றியும் பேசப்பட்டது. அதற்குரிய நடவடிக்கையை கடற்படையினர் எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

மன்னார் மாவட்டத்துக்கென துறை முகமொன்று கிடையாது. எனவே, பேசாலையில் துறை முகமொன்றை அமைப்பதற்கு திட்டமிட்டு, அதற்குரிய நடவடிக்கை இடம்பெறுகின்றது. எனினும், குறித்த துறைமுகம் தொடர்பில் மக்கள் மத்தியில் சந்தேகம் உள்ளது.

அந்த சந்தேகத்தை நாம் நீக்க வேண்டும். அரசாங்க அதிபர், அதிகாரிகள் உள்ளிட்டோர் மக்களை சந்தித்து கலந்துரையாடி, துறைமுகத்தின் முக்கியத்துவம் பற்றி விளக்கமளிக்க வேண்டும்.

அதேவேளை, இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பு தொடர்பிலும் பேசப்பட்டது. இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுத்து நிறுத்துமாறு மீனவர்கள் கோரிக்கை விடுத்தார்கள்.

அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு கடற்படையினரும் உரிய பங்களிப்பை வழங்கி வருகின்றனர். எதிர்காலத்தில் இந்திய மீனவர்களின் வருகையை முற்று முழுமையாக நிறுத்த முடியும் என நம்புகின்றோம். இராஜதந்திர மட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.” – என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மேலும் குறிப்பிட்டார்.

இதன்போது கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் ரத்ன கமகே, வடக்கு, கிழக்கில் மீனவர்களை சந்தித்து வருகிறோம். மாவட்ட, மாகாண மட்டத்தில் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன.

மன்னார், பேசாலையில் 2026 இல் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும். இதற்கு உலக வங்கி ஆதரவு பெறப்படும். அதேபோல் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தீர்க்கப்படும்.” என்றார்.

இந்திய மீனவர்களின் வருகை தற்போது குறைந்துள்ளதாகவும், அதற்கு நடவடிக்கை எடுத்த அமைச்சர்கள் மற்றும் கடற்படையினருக்கு மன்னார் மாவட்ட மீனவ பிரதிநிதிகள் இதன்போது நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே உள்ளிட்ட பல பிராந்திய அரசியல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அத்துடன், அமைச்சின் மேலதிக செயலாளர், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், கடலோரப் பாதுகாப்பு திணைக்களம், பொலிஸார், சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் பல முக்கிய கடற்றொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள், அத்துடன் கடற்றொழில் அமைச்சின் கீழ் உள்ள இலங்கை கடற்றொழில் துறைமுக கூட்டுத்தாபனம், இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம், நாரா (NARA) நிறுவனம் மற்றும் நாக்டா (NAQDA) நிறுவனம் ஆகியவற்றின் அதிகாரிகள் மற்றும் தலைவர்களும் கலந்து கொண்டனர்

Related posts

ஆட்சிக்கு வரும் தலைவர்களின் காதலியே! ஹக்கீம்

wpengine

மன்னாரில் கனிய மணல் அகழ்விட்கான கலந்துரையாடல் – மக்களின் மத்தியில் எதிர்ப்பு .

Maash

ஐரோப்பிய ஒன்றியத் தூதுவருடன் ரிஷாட் பதியுதீன் சந்திப்பு!

wpengine