பிரதான செய்திகள்

பெற்றோலுடனான கப்பல் மேலும் தாமதமடையக்கூடும் மன்னிக்கவும்-அமைச்சர்.

இலங்கை வரவுள்ள 40 ஆயிரம் மெட்ரிக் தொன் பெற்றோலுடனான கப்பல் மேலும் தாமதமடையக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் நாட்டை வந்தடையவிருந்த குறித்த கப்பல் இன்று இலங்கையை வந்தடையவுள்ளதாக வழங்குனர்களால் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு ஏற்கனவே உறுதியளிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், கப்பலின் வருகை மேலும் தாமதமடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாமதத்திற்கு பொதுமக்களிடம் மன்னிப்பு கோருவதாக எரிசக்தி அமைச்சர் ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்டு தெரிவித்துள்ளார்.

Related posts

IMF மீளாய்வு வரை எந்த மாற்றமும் கிடையாது!-ஷெஹான் சேமசிங்க-

Editor

வவுனியா மக்களுக்கு பொது எச்சரிக்கை! டெங்கு கவனம்

wpengine

கண்டியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் வடுக்கள் ஆறவில்லை

wpengine