பிரதான செய்திகள்

பெற்றோலுக்காக மோடியினை தொடர்புகொண்ட மைத்திரி

இலங்கையில் ஏற்பட்டுள்ள பெற்றோல் நெருக்கடியைச் சமாளிக்கும் வகையில், இந்தியா பெருந்தொகைப் பெற்றோலை அனுப்பும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

 

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, நரேந்திர மோடி இடையில் நேற்று  (8) மாலை தொலைபேசி கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன்போதே மோடி தம்மால் இயன்ற அனைத்து உதவிகளையும் வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.

அதன் முதற்படியாக, இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனம் தன் வசமிருக்கும் சுமார் 3 ஆயிரத்து 500 கிலோ பெற்றோலை உடனடியாக வினியோகத்துக்குக் கொண்டுவந்துள்ளது.

மேலும், 21 ஆயிரம் கிலோ பெற்றோலை ஏற்றிக்கொண்டு இந்தியக் கப்பல் ஒன்று இலங்கை நோக்கிப் புறப்பட்டுவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொச்சியில் உள்ள எண்ணெய் துப்புரவு ஆலையில் கையிருப்பில் இருக்கும் பெற்றோலையும் தேவைக்கேற்ப அனுப்பி வைப்பதாக மோடி தெரிவித்துள்ளார்.

Related posts

12வது நாள் கவனயீர்ப்பு போராட்டம்! ஆதரவு வழங்கிய சிலாவத்துறை ஆட்டோ சங்கம் (படம்)

wpengine

அரிசி தட்டுப்பாட்டிற்கு, நாய்களே காரணம் – ஆளும் தரப்பு Mp

Maash

மைத்திரிக்கு எதிராக உளவியல் யுத்தம்

wpengine