பிரதான செய்திகள்

பெரும்தொகை. கேரளகஞ்சாவுடன் குடும்பப்பெண் கைது!!

கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நேற்று(30) மயில்வாகனபுரம் கொழுந்துப்புலவு பகுதியில் வீடொன்றின் பின்புறமாக மறைத்து வைத்திருக்கப்பட்டிருந்த நிலையில் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

79 கிலோ 245 கிராம் நிறை கொண்ட கேரளா கஞ்சாவினை இவ்வாறு தர்மபுரம் பொலிஸார் மீட்கப்பட்டுள்ளதுடன், வீட்டு உரிமையாளரான 55 வயதுடைய பெண் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரான விசுவமடு கொழுந்துப்புலவு பகுதியை சேர்ந்தவர் 55 வயதுடைய பெண்ணையும் மற்றும் தடையப் பொருட்கள் இன்று (01) கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதி மன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி D.M.S.J . திஸ்ஷநாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த கஞ்சாவானது இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

Related posts

கோப்பியும் இல்லை தேனீரும் இல்லை“ ராஜிதவை இணைத்துகொள்ள மாட்டேன்

wpengine

பௌத்த மதத்திற்கு உயிரை கொடுக்கும் முஸ்லிம் அமைச்சர் ஹபீர்

wpengine

ஆயுதங்கள் மற்றும் குற்றச்செயல்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கு துரித தொலைபேசி இலக்கம்.

Maash