செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

பெண் வேடமிட்டு சங்கிலி பறிக்கும் கும்பல் – 2 பெண் உட்பட 4 பேர் கைது .

யாழ்ப்பாணத்தில் சங்கிலி அறுத்த குற்றச்சாட்டில் பெண் வேடமணிந்த ஆண் உள்ளிட்ட இரண்டு ஆண்களும் 2 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இணுவில் பகுதியில் உள்ள ஆலயமொன்றில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தேர்த்திருவிழாவின் போது, பக்தர்களின் சுமார் 4 பவுண் சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது

சங்கிலி அறுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் ஆலய சூழலில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய நால்வரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நால்வரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் மட்டக்களப்பைச் சேர்ந்த வேற்று இன மதத்தை சேர்ந்தவர்கள் என தெரியவருகின்றது.

Related posts

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஒதுங்கி விட அனுரகுமார திஸாநாயக்க சீற்றம்

wpengine

பேராசை பிடித்துள்ள ரணில்

wpengine

ராஜபக்ஷர்களை திருப்திப்படுத்தும் வண்ணம் அரசியலமைப்பை திருத்த அரசாங்கம் சதி

wpengine