பிரதான செய்திகள்

பெண்கள் மிகவும் ராஜபக்சக்களை நேசிக்கின்றார்கள்”

ராஜபக்சக்களை பெண்களே அதிகளவில் நேசிப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.


கம்பஹா, கட்டானை தேர்தல் தொகுதியில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் பங்கேற்ற போது இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

நாடு தற்பொழுது அடைந்துள்ள நிலைமையிலிருந்து நாட்டை மீட்டு எடுப்பதற்கு மஹிந்த ராஜபக்சவின் நோக்கினை முன்கொண்டு செல்லக்கூடிய தலைவர் ஒருவர் தேவைப்படுகின்றார்.

பொதுஜன முன்னணியின் தலைவராக மக்களினால் கோரப்படும் ஒருவரே வரவேண்டும். அதுவே மஹிந்த ராஜபக்சவினதும் நிலைப்பாடாக அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் குழுமியிருந்தவர்கள் கோத்தபாய ராஜபக்சவின் பெயரை உரக்க கோசமிட்டனர்.

இதன் போது “பெண்கள் மிகவும் ராஜபக்சக்களை நேசிக்கின்றார்கள்” என பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்தவினால் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடிந்தால் வரலாற்றில் யாரும் எடுக்காத அளவிற்கு வாக்குகளை எடுத்திருப்பார் என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

மூவின மக்களும் கௌரவமாக வாழ வேண்டும் வெளிச்சம் கூட்டத்தில் கோத்தபாய

wpengine

ஜனாதிபதி வழங்கிய 22 வாக்குறுதிகளில் ஒன்று மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது.

Maash

பொதுபல சேனாவின் டிலான் வித்தானேக விசாரணை

wpengine