பிரதான செய்திகள்

பெண்களை கௌரவிக்க ஷிரந்தியை விட சிறந்த விருந்தினரை பெண் வழக்கறிஞர்கள் சங்கம் கண்டுபிடிக்க முடியவில்லையா?

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற வைபவமொன்றில் பிரதம விருந்தினராக பங்கேற்றுள்ளார்.

இந்த வைபவத்தை பெண் வழங்கறிஞர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. அதில்,பெண்கள் பலரும் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

நீதியமைச்சர் அலி சப்ரியும் அந்த வைபவத்தில் கலந்துகொண்டிருந்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சியும் பங்கேற்றிருந்தார்.

இந்த வைபவத்துக்கு ஷிரந்தி ராஜபக்ஷ அழைக்கப்பட்டமைக்கு, சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

பெண்களை கௌரவிக்க ஷிரந்தி ராஜபக்சவை விட சிறந்த விருந்தினரை பெண் வழக்கறிஞர்கள் சங்கம் கண்டுபிடிக்க முடியவில்லையா? பெண் வழக்கறிஞர் சங்கத்தின் உறுப்பினர்கள் மக்கள் போராட்டத்திற்கு இவ்வளவு தொனியில் காது கேளாதவர்களா? என்றெல்லாம் கேள்விகளை தொடுத்துள்ளனர்.

Related posts

சேதங்கள் தொடர்பில் உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு அறிவிப்பு

wpengine

மே 1ம் திகதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தொழிற்சங்க கூட்டமைப்பின் விசேட கூட்டம்!

Editor

2017 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் இடாப்புத் திருத்தம் இன்று ஆரம்பம்

wpengine