பிரதான செய்திகள்

பெண்களுக்கெதிராக இன்று வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

பெண்களுக்கெதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தினை முன்னிட்டு பெண்களுக்கும் பெண் பிள்ளைகளுக்கும் எதிரான வன்முறைகளை ஒழிப்போம் எனும் தொனிப்பொருளில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

வவுனியா – இரண்டாம் குறுக்குத்தெருவில் இன்று காலை இந்த கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றுள்ளது.

அதன் பின்னர் விடுதி ஒன்றில் பெண்களுக்கான விழிப்புணர்வு கருந்தரங்கும் நடைபெற்றது.
இதில் அமைப்பின் பிரதிநிதிகள், குடும்ப நல உத்தியோகத்தர்கள், வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலுள்ள ஆடை தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts

கொழும்பில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டம் – பிரசன்ன ரனதுங்க!

Editor

சிறுநீரக நோயை ஒழிக்க தூய குடிநீர் திட்டம் அமைச்சர் றிசாட் பங்கேற்பு

wpengine

திருமலை – கண்டி பிரதான வீதியில் விபத்து!

Editor