செய்திகள்பிரதான செய்திகள்

பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு விசேட தொலைபேசி இலக்கம்..!

பொதுப் போக்குவரத்தில் பெண்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 109 என்ற துரித இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி அறிவிக்குமாறு பிரதி பொலிஸ்துறை மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு எதிரான வன்முறை
நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர், தற்போது பொதுப்போக்குவரத்தில் பயணிக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், இவ்வாறான சம்பவங்கள் குறித்து தொடர்ந்தும் எமக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இவற்றைத் தடுக்கும் வகையிலேயே துரித இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான வன்முறை சம்பவங்கள் இடம்பெறும்போது அவை தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

அதன்மூலம், பெண்களுக்கான நீதியை பெற்றுத்தர முடியும் எனப் பிரதி காவல்துறை மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

Related posts

மலையக சிறுமியின் பரிதாபத்தில் உள்ள சத்தியங்கள்! வெளிவரும் உண்மைகள்

wpengine

மே மாத இறுதிக்குள் கல்வியியற் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை இணைக்க நடவடிக்கை!

Editor

16ஏக்கர் காணி மன்னார் அரசாங்க அதிபர் வசம்! இன்று விடுவிப்பு

wpengine