Breaking
Tue. Nov 26th, 2024

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்கின்ற பெண்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் உற்பத்தி பொருட்களின் மபொரும் கண்காட்சி மற்றும் மலிவு விற்பனை நிகழ்வு கடந்த திங்கட்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.

பெண்களுக்கான வலுவூட்டலுக்கும்  அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவியும் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான சல்மா ஹம்சாவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், மேர்சி லங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் உஸ்தாத் அப்துல்லாஹ் முனீர் சிறப்பதிதியாக கலந்து சிறப்பித்தார்.

அத்துடன், மேர்சி லங்கா நிறுவனத்தின் திட்டமிடல் பணிப்பாளர் அஷ்ஷேக் முனாஸ், நிறைவேற்று செயலாளர் அஷ்ஷேக் ஹஸன் சியாட், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர், காத்தான்குடி நகர சபை செயலாளர், மாவட்ட அரச சார்பற்ற சம்மேளனங்களின் தலைவர் சில்வெஸ்டர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் வருமை கோட்டின் கீழ் வாழ்கின்ற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சிறு கைத்தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்துக்குமான அமைப்பு விதாதா  வள நிலையம், காத்தான்குடி பிரதேச செயலகம் மற்றும் மேர்சி லங்கா நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து மேற்படி ‘பெண்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் உற்பத்தி பொருட்களின் மபொரும் கண்காட்சி மற்றும் மலிவு விற்பனை -2018’ ஏற்பாடு செய்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட தையல் உற்பத்தி பொருட்கள் மேர்சி லங்கா நிறுவனத்தால் வழங்கப்பட்ட 10 ஜுகி தையல் இயந்திர பயனாளர்களால் முன்வைக்கப்பட்டிருந்தமைக் விசேட அம்சமாகும்.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *