பிரதான செய்திகள்

பூநகரி பிரதேசத்தில் சட்டவீரோத மரம் கடத்தல்! வனவள அதிகாரி தாக்குதல்

கிளிநொச்சி, பூநகரி பிரதேச செயலக பிரிவிலுள்ள முட்கொம்பன் செக்காலை காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக மரம் வெட்டியவர்களை பிடிக்கச் சென்ற வனவள அலுவலர் ஒருவர் நேற்று மரம் அரியும் இயந்திரத்தின் வெட்டுக்கு இலக்காகியுள்ளார்.

அத்தோடு ஏனைய அலுவலர்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதோடு இந்த தாக்குதலை மேற்கொண்ட சட்டவிரோதமாக மரம் வெட்டிவர்கள் தப்பிச்சென்றுள்ளனர்.

 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வனவள திணைக்களத்தின் பூநகரி வட்டார அலுவலகத்தில் இருந்து மேற்படி பிரதேசத்திற்கு கள விஜயம் மேற்கொண்ட வனவள திணைக்கள பகுதி வன அதிகாரி மற்றும் அலுவலர்கள் சென்ற போது மரம் அரியும் இயந்திரத்தின் ஒலி காட்டுப் பகுதியில் கேட்டதனை தொடர்ந்து வனவள அலுவலர்கள் காட்டுக்குள் சென்றுள்ளனா்.

 

கிராமத்தில் இருந்து இரண்டு கிலோ மீற்றர் அளவில் அடர்ந்த பல பெறுமதியான மரங்களை கொண்ட பகுதியில் ஜந்துக்கு மேற்பட்டவா்கள் மூன்று மரம் அரியும் இயந்திரங்களை பயன்படுத்தி சட்டவிரோதமாக மரங்களை வெட்டி அவற்றை பலகைகளாக அறுத்துக் கொண்டிருப்பதனை அவதானித்துள்ளனா்.

இந்நிலையில், சட்டவிரோதமாக மரம் வெட்டியவர்கள் தப்பிச் செல்ல முற்பட்ட போது அவர்களை பிடிக்க வனவள அலுவலர்கள் முயற்சி செய்துள்ளனர்.

இதன்போது ஏற்பட்ட கைகலப்பில் மரம் வெட்டிய ஒருவா் தான் வைத்திருந்த இயந்திரம் மூலம் அலுவலரின் கையில் வெட்டி விட்டு இயந்திரத்தையும் கைவிட்டு தப்பிச் சென்றுள்ளார். ஏனையவா்கள் இயந்திரங்களுடன் தப்பிச்சென்றுள்ளனா்.

 

காயமடைந்த வனவள அலுவலா் பூநகரி வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிசை பெற்று வருகிறார். அத்தோடு இது தொடர்பில் பூநகரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களில் ஒருவா் ஏற்கனவே நீதிமன்றினால் பிடியாணை பிறபிக்கப்பட்டவா் என வனவள அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.

 

பூநகரி முட்கொம்பன் பிரதேசத்தின் அடர்ந்த காட்டுப்பகுதியில் முதிரை, பாலை போன்ற பெறுமதியான நீண்ட காலம் முதிர்ந்த மரங்கள் காணப்படுகின்றன.

இந்த பகுதியில் நீண்ட காலமாக சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றமை தொடர்பில் பொது மக்களினால் அனைவரினது கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட செயற்கை கடற்கரை திறந்து வைப்பு!

Editor

S.P.மஜித்தின் சுரங்க பணியாளர்கள் மீண்டும் உண்ணாவிர போராட்டம்

wpengine

அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு எதிரான தீர்மானம் அரசியல் கோணம்

wpengine