பிரதான செய்திகள்

பூஜித் ஜயசுந்தர, பிரதமருக்கு தேவையான வகையிலேயே செயற்பட்டார்.

பொலிஸ் திணைக்களம் ஜனாதிபதியின் கீழ் இருந்தாலும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, பிரதமருக்கு தேவையான வகையிலேயே செயற்பட்டார் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இதன் போது செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த, வாசுதேவ நாணயக்கார, ஜனாதிபதியை கொலை செய்யும் சதித்திட்டமே, பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட பிரதமான காரணம் எனவும் கூறியுள்ளார்.

தன்னை கொலை செய்ய திட்டமிட்ட ஒருவருடன் எப்படி இணைந்து செயற்படுவது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் மூலம் ஜனநாயகத்தின் கழுத்து நெறிக்கப்பட்டுள்ளது எனவும் நாணயக்கார மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

உணவு ஒவ்வாமையினால் 22 மாணவர்கள் வைத்தியசாலையில், மட்டக்களப்பில சம்பவம்.

Maash

உதாகம்மான ”எழுச்சி – அரச ஊழியா்கள் வீடமைப்புக் கிராமம்” – சஜித் பிரேமதாச

wpengine

இன்று மூன்று பேருக்கு கொரோனா! யாழ் மாவட்டத்தில்

wpengine