பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

பூசையில் ஈடுபட்ட 15பேர் கைது! கொரொனா கட்டுப்பாடு இல்லை

வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட புளியங்குளம் பழைய வாடி கிராமத்தில் வழிபாட்டில் ஈடுபட்ட பூசகர் உட்பட 15 நபர்களை இன்று மதியம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.


வவுனியா புளியங்குளம் பழைய வாடி கிராமத்திலுள்ள சிவ நாகதம்பிரான் ஆலயத்தில் பௌர்னமி தின விசேட பூஜை வழிபாடுகள் நடைபெறுவதற்குறிய விசேட ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் அங்கு சென்ற புளியங்குளம் பொலிஸார் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாது வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டதாக தெரிவித்து பூசகர் உள்ளிட்ட 15 நபர்களை கைது செய்து புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.


வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களை ஆலயத்தினுள் அனுமதிக்க வேண்டாமென அப்பகுதி சுகாதார பரிசோதகர்கள் , பொலிஸாரால் அறிவித்தல் வழங்கப்பட்ட நிலையில் அதனை மீறி செயற்பட்டதாக தெரிவித்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

முல்லைத்தீவில் சிலர் யதார்த்தங்களை மறந்து முஸ்லிம்கள் தங்களது தாயகத்துக்கு திரும்பி வரும்போது விரட்டுகின்றீர்களே! றிஷாட் ஆவேசம்

wpengine

அதிக விலையில் உரம் விற்பனை முறைப்பாடுகளை முன்வைக்க முடியும்.

wpengine

சுற்றுலா துறை அபிவிருத்தி தொடர்பான கூட்டம் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தலைமையில் கற்பிட்டியில்!

Editor