பிரதான செய்திகள்

பூசாரி ஹெரோயின் போதை பொருள் விற்பனை! பெண்ணிடமிருந்து மீட்பு

பூசாரி போல வேடமிட்டு ஹெரோயின் போதை பொருள் விற்பனை செய்த இருவரை நாவலப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நாவலப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய போதைப்பொருள் வாங்குபவர் போல வேடமிட்டு பொலிஸ் அதிகாரி ஒரு குறித்த இடத்திற்கு சென்றே மேற்படி இருவரையும் இன்று (13) பிற்பகல் கைது செய்துள்ளதுடன் குறித்த பெண்ணிடமிருந்த 140 மில்லிகிராம் ஹெரோயின் போதை பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கம்பளை அட்டபாகை பகுதியை சேர்ந்த 67 வயதுடைய ஆணும் நாவலப்பிட்டி இங்குருஓயா சேர்ந்த 26 வயதுடைய பெண் ஒருவருமே இவ்வாறு பூசாரி போல் நடித்து நாவலப்பிட்டி நகரிலுள்ள கடையொன்றில் சூட்சமமாக நீண்ட காலம் ஈ.சி.கேஷின் ஊடாக பணம் பெற்று ஹெரோயின் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபரையும் நாவலபிட்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதாக நாலவப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு! ஓட்டமாவடியில் ஆர்ப்பாட்டம்

wpengine

ஞானசார கைது செய்வதை தடுக்க கோரி மனுத் தாக்கல்

wpengine

முஸ்லிம் பாடசாலைகள் மீண்டும் நாளை திறக்கப்படும்

wpengine