பிரதான செய்திகள்

புலிகளுக்காக போராடிய 275 முஸ்லிம்களை ஒரே குழியில் புதைத்தார்கள் -சுபையிர் காட்டம்

விடுதலைப் புலிகள் அமைப்பில் உறுப்பினர்களாக இருந்த முஸ்லிம்கள் சுமார் 275 க்கு மேற்பட்டோர் மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்திலுள்ள பனிச்ரங்கேணியில் ஒரே குழிக்குள் புதைக்கப்பட்டதாக தெரியவருகிறது.

இது தொடர்பில் விடுதலைப் புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண பொறுப் பாளராகவிருந்த கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் விசாரிக்கப் பட வேண்டும் என
கிழக்கு மாகாண சபை முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய உறுப்பினருமான எம்.எஸ். சுபைர்
தெரிவித்தார்.

கிழக்கில் இடம்பெற்ற முஸ்லிம்கள் மீதான படுகொலைகள் தொடர்பாக புதன்கிழமை கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது,

கிழக்கில் முஸ்லிம்கள் மீதான படு கொலைகளை ஆவணப்படுத்துகின்ற போது மட்டக்களப்பில் சுமார் 275க்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்களும்
யுவதிகளும் கூட தமிழர் உரிமைப் போராட்டத்திலே பங்குகொண்டு தங் களைத் தியாகம் செய்திருக்கின்றார்கள் என்ற ஆதாரமும் இருக்கின்றது.

பின்னாட்களில் அந்த இயக்கத்தில் இணைந்து தங்கள் உயிரையே அர்ப் பணித்துச் செயற்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முஸ்லிம் ஆண் பெண் உறுப்பினர்கள் அந்த இயக்கத்தின் உள் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையின் மூலம் இனப்படுகொலை செய்யப்பட் டார்கள்.

அதேவேளை, கிழக்கிலிருந்த பொலிஸ் நிலையங்களில் கடமை யாற்றிய முஸ்லிம் மற்றும் சிங்களப் பொலிஸார் சுமார் 600 இற்கும் மேற் பட்டோரைக் கடத்திச் சென்று LTTE: இனர் படுகொலை செய்திருந்தனர்.
எனவே, கடந்த காலத்தில் முஸ் லிம்கள் மீது தனித்தனியாகவும், கொத்துக் கொத்தாகவும் ஊர் ஊரா கவும் இடம்பெற்ற இனப்படுகொலைச் சம்பவங்கள் பற்றி கருணா அம்மான் உள்நாட்டிலும் சர்வதேச யுத்தக் குற்ற நீதி மன்றங்களிலும் விசாரிக்கப்பட்டு தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Related posts

வடமாகாண பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

wpengine

பள்ளிவாசலுக்கான இலத்திரனியல் உபகரணங்களை அமைச்சர் றிஷாட்

wpengine

மன்னார் எழுத்தூர் பெரியகாமம் பகுதியில் புலிகளின் பழைய ஆயும் மீட்பு

wpengine