பிரதான செய்திகள்

புற்றுநோயை ஏற்படுத்தும் பருப்பு கண்டுபிடிப்பு!

வெலிகம பல்நோக்கு கூட்டுறவு நிலையத்திலிருந்து, காலாவதியான நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட பருப்பில் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய எல்பாடொக்சீன் எனப்படும் பதார்த்தம் அடங்கியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயமானது, அரச பகுப்பாய்வு மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதென, வெலிகம பிரதான சுகாதார பரிசோதகர் எம்.எம்.எச். நிஹால் தெரிவித்துள்ளார்.

குறித்த கூட்டுறவு நிலையத்தில் மறைந்து வைக்கப்பட்டிருந்த பாவனைக்குவதாத காலாவதியான 3,100 கிலோகிராம் பருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து இதனை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதே, புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய பதார்த்தம் உள்ளமை கண்டறியப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிலையத்தில் கொள்வனவு செய்யப்பட்ட யோகட் காலாவதியாகியுள்ளதென கிடைத்த முறைபாட்டுக்கு அமைய, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, பருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

Related posts

மாகாண சபை தேர்தல் குறித்து நாடாளுமன்றத்தில் கரு

wpengine

China – Sri Lanka Collaborative Project Workshop Reviewing possible causes Kidney Disease

wpengine

பாலஸ்தீன மக்களுக்கு நீதிகோரி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்..!

Maash