Breaking
Sun. Nov 24th, 2024

சவூதி அரேபிய அரசாங்கம் இவ்வருடம் இலங்கையிலிருந்து 3500 யாத்திரிகர்கள் ஹஜ் பனித யாத்திரையை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. 2019ம் ஆண்டிலிருந்து புனித ஹஜ் கடமையினை மேற்கொள்வதற்காக ஏற்கனவே திணைக்களத்தில் மீளப்பெற்றுக்கொள்ளும் தொகையாக ரூபா 25000.00ஐ செலுத்தி உறுதிசெய்து கொண்டவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்கு ஹஜ் குழுவும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் தீர்மானித்துள்ளன.

இவ்வருடம் புனித ஹஜ் கடமையினை நிறைவேற்றுவதற்காக எண்ணம் (நிய்யத்து) கொண்டுள்ள விண்ணப்பதாரிகள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் இணைய தளத்தினூடாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

அத்துடன் மீளப்பெற்றுக்கொள்ளும் தொகையாக ரூபா 25000.00ஐ இலங்கை வங்கி கணக்கிலக்கம் 2327593 (Hajj Account) இல் வைப்புச் செய்து வங்கயின் பற்றுச் சீட்டின் மூலப் பிரதியை திணைக்களத்திற்கு நேரடியாக சமர்பித்து அல்லது நேரிலோ வந்து திணைக்களத்தில் வைப்புச் செய்து பற்றுச் சீட்டினைப்பெற்றுக் கொண்டு ஹஜ் பிரயாணத்தை உடனடியாக உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

ஹஜ் யாத்திரிகர்கள் தெரிவு பற்றுச் சீட்டின் இலக்க முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என்பதனை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இஸட்.ஏ.எம். பைஸல்,
பணிப்பாளர், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்.

A B

By A B

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *