அரசியல்

புத்த பெருமானின் முன்மாதிரியாக மஹிந்த! நன்றி உடையவர்கள் மிகக் குறைவு. ரோஹித புகழாரம்!

புத்த பெருமானின் முன்மாதிரியாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செயற்பட்டிருந்தார் என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேவர்தன பாராளுமன்றில் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பில் இன்று பாராளுமன்றில் அவர் உரையாற்றுகையில்,

‘கத்தன் யா’ என்றால் என்ன நல்ல குண பண்புகளை உடைய மனிதர்கள் ‘கத்தன் ரியா’ என்றால் செய்கின்ற காரியங்களை நல்லபடியாக செயல்படுத்துகின்ற மனிதர்கள், நன்றியுடைய மக்கள்  என புத்தபெருமான் போதனை செய்கின்றார். உலகத்தில் நன்றி உடையவர்கள் மிகக் குறைவாக இருக்கிறார்கள்.

இந்த நாட்டில் பல ஜனாதிபதிகள் இருந்தார்கள். அண்மையில் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தார். அவர்தான் தெற்கில் இருந்து வந்த ஜனாதிபதி. 

அவர் ஹம்பாந்தோட்டை  உட்பட தென் மாகாணத்திற்கு சேவையாற்றியதுடன் தெற்கு பிரதேசத்திற்கு பாரியளவு சேவையை செய்து நன்றி உணர்வை வெளிப்படுத்தி இருந்தார். 

புதிய நெடுஞ்சாலைகளை அமைத்திருந்தார். விமான நிலையத்தை அமைத்திருந்தார். இவ்வாறு பல விடயங்களை அவர் மேற்கொண்டு இருந்தார். புத்த பெருமானின் முன்மாதிரியாக அவர் அதனை செய்திருந்தார் எனத் தெரிவித்தார்.

Related posts

அன்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இன்று வெளிநாட்டு நிறுவனத்தின் ஒத்துழைப்புடன்…

Maash

வடக்கிற்கான வரவு செலவுத்திட்டமே இது, இதட்கு எதிர்க்கட்சியில் சந்தோஷப்படும் ஒரேயொரு நபர் நானே !

Maash

தபால்மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம் . – வடக்கில் சுமுகமாக இடம்பெற்று வருகின்றது .

Maash