பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

புத்துவெட்டுவான் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் சீருடை வழங்கி வைப்பு

மிகவும் வறுமைப்பட்ட, பாதிக்கப்பட்ட, கிராமத்திற்குள் செல்வதற்கே சீரான பாதைகளற்ற முல்லைத்தீவு மாவட்டத்தின் புத்துவெட்டுவான் கிராமத்தின் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மற்றும் பழைய புத்துவெட்டுவான் அ.த.க.பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் பாடசாலை சீருடை துணியும் கடந்த (23.07.2017) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டது.

லண்டனில் வசிக்கும் தர்மலிங்கம் நாகராசா அவர்களின் அனுசரணையில் பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் புளொட் அமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன் மற்றும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் செயற்குழு உறுப்பினர்களான மகேந்திரன் (ராஜா), வே.மணியம் மற்றும் வன்னி மேம்பட்டு பேரவையின் தலைவர் கனக தவராசா போன்ற பலர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.

Related posts

அம்பாறையில் குழப்பத்தை ஏற்படுத்திய “சிங்க லே“! அமைப்பு

wpengine

உதிரிபாகங்கள் இன்றி பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள்!

Editor

பசில் இரட்டைக் குடியுரிமையை இன்னும் துறக்காததால், சமல் அல்லது தினேஷ் குணவர்தன பிரதமர்

wpengine