எதிர்வரும் புத்தாண்டு காலத்தின்போது உள்நாட்டு அரிசியின் விலை 250 வரை அதிகரிப்பதை யாராலும் தடுக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.
மியன்மார் மாத்திரமல்ல, எந்த நாட்டிலிருந்து அரிசியை இறக்குமதி செய்தாலும் இந்த நிலைதான் ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் காணப்படுகின்ற டொலர் நெருக்கடிக்கு சர்வதேச நாணய நிதியத்தை அன்றி சீனாவை நாடுவதால் தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறுனார்.
அத்துடன் சமையல் எரிவாயு சிலிண்டரை அண்மித்த வெடிப்பு சம்பவங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.