அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

புத்தாண்டுக்குப் பிறகு புதிய நிதியமைச்சர் . !

எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டுக்குப் பிறகு நிதி அமைச்சர் பதவியில் மாற்றம் ஏற்படும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, தற்போது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வகிக்கும் நிதியமைச்சர் பதவியை வேறு ஒருவருக்கு வழங்க முன்மொழியப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

புதிய நிதியமைச்சராக நியமிக்கப்பட முன்மொழியப்பட்டுள்ள நபர், பொருளாதாரம் தொடர்பான பல துறைகளில் அனுபவமிக்க ஒரு முக்கிய தொழிலதிபர் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே இன்னும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும், இன்னும் இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை என்றும் வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

Related posts

வைத்தியசாலை பணியாளர்களின் அசமந்தத்தால், ஒருவர் உயிரிழந்துள்ளார்

wpengine

கல்வி கண்காட்சிக்கு வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் நிதி ஒதுக்கீடு

wpengine

மகிந்த ஜனாதிபதி பதவியை மட்டுமல்ல பிரதமர் பதவிக்கும் தெரிவாக முடியாது

wpengine