பிரதான செய்திகள்

புத்தாண்டில் மரக்கன்று நடுமாறு சுற்றுச்சூழல் அதிகார சபை மக்களிடம் கோரிக்கை!

புத்தாண்டினை முன்னிட்டு ஒரு செடியை நட்டு, சுற்றுச்சூழலுக்கு பங்களிக்குமாறு சுற்றுச்சூழல் அதிகார சபை மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இத்திட்டம் எதிர்வரும் 20ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் அமுலில் இருக்கும் என சுற்றுச்சூழல் அதிகார சபை அறிவித்துள்ளது.

அதன்படி, மருத்துவ செடிகள், பழ மரங்கள் என்பவற்றை நாட்டி இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சுற்றுச்சூழல் அதிகார சபை அனுப்பலாம்.

011 2 87 23 59 அல்லது 011 2 87 22 78 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பதன் மூலம் மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

மரங்களை நட்டு ஓராண்டு நிறைவடைந்த நிலையில் கணக்கெடுப்பு நடத்தி, மரங்களை முறையாக நட்டு பராமரித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

Related posts

விடுதலைப் புலிகளின் ஆரம்ப கட்டம் போன்று இன்று வடக்கில்

wpengine

குஞ்சுக்குளம் கிராமத்தில் ‘அருவி ஆறு சுற்றுலா வலயம்’ திறந்து வைக்கப்பட்டது.

Maash

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவதற்கு நான் தயார்

wpengine