பிரதான செய்திகள்

புத்தளம் முஹாஜிரீன் அரபுக்கல்லூரியின் முப்பெரும் விழா!

புத்தளத்திலே சிறந்து விளங்கும் அரபுக்கல்லூரிகளிலே குல்லியத்துல் முஹாஜிரீன் அரபுக்கல்லூரி சிறப்பானதாகும். இக்கல்லூரியின் வளர்ச்சி மிகத்துரிதமானதாகும். 2004 ஆம் ஆண்டிலே 10 மாணவர்களுடன் ஓர் ஓலைப்பள்ளியாக இக்கல்லூரி தில்லையடியில் ஆரம்பிக்கப்பட்டது. பரோபகாரிகளின் உதவியினால் இந்தக்கல்லூரி இன்று புத்தளத்திலே சிறப்பாக இயங்கி வருகின்றது. இதன் துரித வளர்ச்சிக்கு காரணகர்த்தாவாக விளங்குபவர் கல்லூரியின் ஸ்தாபகப்பணிபாளர் மௌலவி ஷாஹுல் ஹமீது அஷ்ரப் முபாரக் ரஷாதி அவர்களாகும். இந்தக்கல்லூரியை தரமான ஒரு கல்லூரியாக அமைப்பதற்கு அவர் மேற்கொண்டுவரும் முயற்சி மிகவும் மெச்சத்தக்கதாகும்.

இக்கல்லூரி இதுவரை 40 உலமாக்களை உருவாக்கி வெளியேற்றியுள்ளது. இந்த உலமாக்கள் உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் பல்வேறு பதவிகளில் அமர்ந்து சிறப்புற்று விளங்க இக்கல்லூரி பணி செய்துள்ளது.

தற்போது புகழ்மிக்க இக்கல்லூரியில் 150 மாணவர்கள் மௌலவி பயிற்சி பெற்று வருகின்றனர். ஸ்தாபகப்பணிப்பாளரான மௌலவி முபாரக் உயர்ந்த நோக்கம் கொண்டவர். இலட்சியவாதி. எடுத்த காரியங்களை செவ்வனே நிறைவேற்றும் மதிநுட்பமும் திறமையும் செயல் வீரர். அதன் காரணமாகவே இந்தக் குறுகிய காலத்தில் கல்லூரி மேனிலை அடைந்து புகழ்பெற்று விளங்குகின்றது.

மௌலவி முபாரக் அவர்கள் இந்தக்கல்லூரியின் ஸ்தாபகப்பணிப்பாளராகவும், நிர்வாகச் செயலாளராகவும், கல்லூரி அதிபராகவும் கடமையாற்றுவது குறிப்பிடத்தக்கது.

முஹாஜிரின் அரபுக்கல்லூரி தனது முப்பெரும் விழாவை எதிர்வரும் 31ஆம் திகதி கல்லூரி வளாகத்தில் சிறப்பாகக் கொண்டாடுகின்றது.

அல் ஆலிம் பட்டமளிப்பு விழா, அல் ஹாபிழ் பட்டமளிப்பு விழா, சிறப்பு அதிதிகள் கௌரவிப்பு விழா எனும் இந்த சீரிய விழாவுக்கு பிரதம அதிதிகளாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், முஸ்லிம் கலாச்சார விவகார மற்றும் தபால் துறை அமைச்சர் எம் எச் அப்துல் ஹலீம், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் எச் எம் நவவி ஆகியோரும் கௌரவ அதிதிகளாக ஜாமிய்யா நளீமிய்யா உதவிப்பணிப்பாளரும் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா துணைத்தலைவருமான அஷ்ஷெய்க் ஏ சீ அகார் முஹம்மத், ஹதீத் இப்னு உமர் அரபுக்கல்லூரி ஸ்தாபகரும் ஜம்மிய்யதுல் உலமாவின் துணைத்தலைவருமான அஷ்ஷெய்க் எம் ஜே அப்துல் காலித், குருநாகல் மாவட்ட ஜம்மிய்யதுல் உலமா தலைவரும் பஸ்யால அரபுக்கல்லூரி அதிபருமான எம் எச் எம் சுஐப், புத்தளம் காசிம்மிய்யா அரபுக்கல்லூரி அதிபரும் புத்தளம் மாவட்ட ஜம்மிய்யதுல் உலமா தலைவருமான அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம், மற்றும் கொழும்பு இஹ்ஷானிய்யா அரபுக்கல்லூரி அதிபர் எம் இசட் எம் ஹுஸைன் ஆகியோரும் பங்கேற்கின்றனர். 7692d82b-5847-4de6-ae8b-e44192b9c430

Related posts

விசித்திரமான காதல் ஜோடி (படங்கள்)

wpengine

வருட இறுதிக்குள் மாகாண சபை தேர்தலை நடாத்த அரசு தீர்மானித்துள்ளது.

wpengine

20வது வாக்களிப்பு! அமைச்சு பதவியினை பரிகொடுத்த வீரசுமண வீரசிங்க

wpengine